வீரேந்திர ஷேவாக்கின் தலையில் இருக்கும் முடிகளின் எணணிக்கையை விட தன்னிடம் அதிக பணம் இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கிண்டலாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தரருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, எனது நண்பர் ஷேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது.
அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.
ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது, இந்தியாவால் அல்ல. ஷேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.