உலக நாடுகளை அச்சமடைய செய்திருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலாக பிரித்தானியர் ஒருவருக்கு பரவியதாக அச்சம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்டது பறவை காய்ச்சல் என தெரியவந்துள்ளது.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் ஜப்பான், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்த சூழலில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியாரான Ash Shorley (32) என்ற இளைஞரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
Ash Shorley தாய்லாந்தில் இருந்த போது அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக மருத்துவமனையில் உள்ளார்.
இந்நிலையில் அவரை கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்றும், பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது உடல்நலம் தேறியுள்ள Ash Shorley நடக்கவும் தொடங்கியுள்ளார்.
இது குறித்து Ash Shorley-வின் தந்தை கூறுகையில், என் மகன் மட்டும் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவில்லை என்றால் அவனை நாங்கள் இன்று உயிரோடு பார்த்திருக்க முடியாது.
அவன் காய்ச்சலாம் பெரிது அவப்பட்டுள்ளான் என கூறியுள்ளார்.