காமெடியன்களில் தமிழ் சினிமாவில் யோகி பாபுவுக்கு தான் இப்போது லக் அடித்துள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து விட்டார். கடந்த வருடம் மட்டுமே 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகி பாபு இந்த வருடம் இதற்குள் கைவசமாக 16 படங்கள் வைத்துள்ளார்.
அதோடு அவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 5 லட்சம் வாங்குவதாக கூறப்பட்டது. அண்மையில் ஒரு பேட்டியில், நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்தேன்.
தூக்கம் போனது, கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின, உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இப்போது இரவு-பகல் என நடிப்பதில்லை, கதையின் நாயகனாக வருடத்திற்கு ஒரு படம் இனி நடிப்பேன் என யோகி பாபு கூறியுள்ளார்.