ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் உலகம் முழுவதும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்து வந்தது, இந்நிலையில் மலேசியாவில் முதல் வாரத்திலேயே தர்பார் ரூ 7 கோடி வரை வசூல் செய்திருந்தது.
தற்போது 3 வாரத்தில் கூட இப்படம் 60 லொக்கேஷனில் வெற்றி நடைப்போடுகின்றதாம். இந்நிலையில் தர்பார் மலேசியாவில் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், பிகில் அங்கு ரூ 20 கோடி வசூல் செய்திருந்தது, இந்த சாதனையை தர்பார் முறியடிக்குமா? பார்ப்போம்.