கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியாகியுள்ள நிலையில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த யாரும் இதில் பாதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதுவரை 1,300 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை புனே மருத்துவத் துறை உறுதி செய்துள்ளது.
பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 96 விமானங்களில் 20,884 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில் சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள 80 பேருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில் ஏழு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிப்படையவில்லை.
கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.