தமிழ் திரைப்படத்தில் உனக்கும் எனக்கும், பூலோகம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ஜோடியாக இணைந்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்த ஜோடி தான் ஜெயம் ரவி மற்றும் த்ரீஷா.
உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் இவர்கள் ஜோடி அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. மேலும், தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் இணைந்து நடித்தார்கள். இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படம் தான் மணிரத்தினம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன்.
மேலும், இந்த படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் த்ரிஷாவும், ராஜராஜா சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களை பொறுத்தவரையில் குறிப்பிட்டு பார்க்கும் போது, ஜெயம் ரவி த்ரிஷவிற்கு தம்பியாக தான் நடித்து வருகிறார் என்று தெரிய வருகிறது.