சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் விமான பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனோ வைரஸ் காரணமாக மிக மோசமான பாதிப்புகளை சீனா எதிர்கொண்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வைரஸ் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், சீனாவில் இருந்துகொண்டு வரப்படும் எனவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.