இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் மாலைத்தீவு ஜனாதிபதி ஆகியோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறியமைக்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
“ குடியரசு தின வாழ்த்து தெரிவித்தமைக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி கூறியதுடன், இலங்கையுடனான ஆழமான வேரூன்றிய நட்பை இந்தியா மதிக்கிறது” எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்ற கலாசார நிகழ்வில் தனது பாரியாருடன், பங்கேற்றதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.