இலங்கையின் 32 வயதான ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது அதிகபடியான நேரத்தை ஜிம்மில் செலவழிக்கிறார் என்று இலங்கை அணியின் துணை ஊழியர்கள் ஒருவர் கூறுகிறார்,
அவர் மிகவும் ஆரோக்கியமானவராக மாறிவிட்டார், அவர் சுமார் 6-7 கிலோ எடை குறைத்துள்ளார். அவர் உணவு அட்டவணையை கண்டிப்புடன் பின்பற்றுகிறார்.
ஏனென்றால், அவர் நீண்ட நேரம் விளையாடுவதில் உறுதியாக இருக்கிறார், மேலும் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறார் என துணை ஊழியர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேத்யூஸ் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடியதற்காக மிகவும் விமர்சிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 64க்கும் மேற்பட்ட ரன் அவுட்களில் மேத்யூஸ் ஈடுபட்டதாக முன்னாள் இலங்கை பயிற்சியாளர் ஹதுருசிங்க தெரிவித்திருந்தார்.
அந்த 64 முறையில், சுமார் 45 முறை, மறுமுனையில் இருந்த துடுப்பாட்டகாரர் வெளியேறினார். ஒரு நாள் போட்டியில் களமிறங்குவதற்கு மேத்யூஸுக்கு கிரிக்கெட் உடற் தகுதி இல்லை என்று ஹதுருசிங்க மற்றும் தேர்வாளர்களும் வாதிட்டனர்.
இவ்வாறான நிலையில், கடந்த வாரம் ஜிம்பாப்வேயில் நடந்த முதல் டெஸ்டில் மணிக்கணக்கில் விளையாடிய மேத்யூஸ் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.
Giving up is a choice and not an option.
Train your body and condition your mind, stand strong and let nobody determine ur destiny!✌️#2020 #BeYourOwnMan pic.twitter.com/cvlIEW1sbZ
— Angelo Mathews (@Angelo69Mathews) January 6, 2020
முயற்சியை கைவிடுவது ஒரு தெரிவு, அது விருப்பம் அல்ல. உங்கள் உடலைப் பயிற்றுவித்து, உங்கள் மனதை நிலைநிறுத்துங்கள், வலுவாக நிற்கவும், நமது விதியை யாரும் தீர்மானிக்க விடாதீர்கள்! என சமீபத்தில் சமூக ஊடகங்களில் மேத்யூஸ் வெளியிட்டிருந்தார்.