மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்று அடுத்தடுத்து மூன்று பேரின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா-மத்தியப் பிரதேச எல்லையில் கடந்த சனிக்கிழமை நண்பகல், கிராமப்பகுதியில் புகுந்த புலி ஒன்று அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஷங்கர் துர்கர் (40), சோட்டேலால் தக்ரே (35) மற்றும் வீரேந்திர சஹாரே (45) என்கிற மூன்று பேர் பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரபரப்பான இந்த சம்பவத்தின் போது அங்கு வனத்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமே கற்களை வீசி புலியை விரட்டியடித்துள்ளனர்.
You want to see how does a narrow escape looks like in case of encounter with a #tiger. #Tiger was cornered by the crowd. But fortunately end was fine for both man and tiger. Sent by a senior. pic.twitter.com/1rLZyZJs3i
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 25, 2020