சீனாவில் உயிரியல் ஆய்வுக்கூடத்தின் மனிதர்களைக் கொல்லும் உயிரியல் ஆயுதமாக கெரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல் விஞ்ஞானியுமான டேனி ஷோஹம், தி வொஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்குத் தெரியாமல் உயிரியல் ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை வுஹானில் சீன அரசு உருவாக்கி நடத்தி வந்தது.
மனிதர்களைக் கொல்லும் கிருமிகள் உருவாக்கப்படுவது குறித்து உலகநாடுகளுக்கு தெரியவந்ததும், அதுபோன்ற ஆய்வுக்கூடம் இல்லை என்று சீனா மறுத்தது.
ஆனால் இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி சீனாவின் வுஹான் நகரில் இதுபோன்று 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அறிந்தபோது இந்த தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக பரவியிருக்கலாம். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் இஸ்ரேல் விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய லியுடினன்ட் கோலோனல் டேனி ஷோஹம், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உலகளவில் உயிரியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.