சமூக ஊடகங்களில் பிரபலமான சீன இளம்பெண் ஒருவர் வௌவால் உணவை சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பொதுமக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளார்.
சீனாவை மொத்தமாக உலுக்கியுள்ள கொரோனா வியாதிக்கு வௌவால் உணவும் ஒரு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில்,
Wang Mengyun என்பவர் கிண்ணம் ஒன்றில் முழு வெளவால் உணவை ருசித்து சாப்பிடுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொரோனா வியாதியின் மையமாக கருதப்படும் வுஹான் நகரில் நடந்துள்ளது.
இங்குள்ள 11 மில்லியன் மக்களும் தொடர்புடைய கொடூர வியாதி பாதிப்பு காரணமாக வெளியேற முடியாமல் அதிகாரிகளால் முடக்கப்பட்ட நிலையிலேயே Wang Mengyun என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் பொதுமக்கள் மத்தில் கடும் கொந்தளிப்பையும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதை அடுத்து,
அந்த வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். வுஹான் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த வீடியோ அது என Mengyun சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமது நேயர்கள் மன்னிக்க வேண்டும் எனவும் வெளவால் உணவுகளை தாம் சாப்பிடுவது இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.



















