சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்து விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும் அதனை விட்டுக்கொடுக்க பெரும்பான்மை மேலதிக அரசு தயார் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் அதனை எண்ணி தமிழ் மக்கள் கவலைபட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக சிறுபான்மையினரின் மொழிகளான ஆங்கிலம் மற்றும் வேடுவ மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுமானால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என தெரிவித்துள்ள அவர் ஆனால் அது எந்தளவு சாத்தியமானது என்பது சந்தேகத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.