ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்வதென நேற்று மாலை நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்க நேற்றிரவே சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தனது கையெழுத்தில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் வழங்கக் கூடிய அதிகாரங்கள் சம்பந்தமாக மீண்டும் ஒரு முறை விடயங்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் வழங்கக் கூடிய அதிகாரங்களை 5 விடயங்களின் கீழ் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். இந்த அதிகாரங்கள் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்த அதிகாரங்களை விட அதிகமானது என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட நேற்றைய செயற்குழுக் கூட்டத்தை சஜித் பிரேமதாச தரப்பினர் பகிஷ்கரித்திருந்தனர்.