Xiaomi Mi 10 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி 6.4 அங்குல அளவுடையதும், 2080×1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதுமான குறித்த கைப்பேசியில் Qualcomm Snapdragon 865 mobile processor தரப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதான நினைவகமாக 16GB RAM, 512GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 108 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது.
எனினும் செல்ஃபி கமெரா தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும் இதில் நீடித்து உழைக்கக்கூடிய 5250 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.