சீனாவுக்கான தமது பயணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிற்போட்டுள்ளார்.
கொரோனாரைவஸ் தாக்கம் காரணமாகவே இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பயணம் இந்த மாதத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.
சீனாவுக்கு கோட்டாபய பயணம் மேற்கொண்டால் அது அவர் பதவியேற்றபின்னர் சீனாவுக்கு செல்லும் முதல் பயணமாக இருக்கும்.
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச தமது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.