மன்னார் இரணைமாதா நகர் பகுதியில் நேற்று முன்தினம் (31) கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினர் முழங்காவில் பொலிஸ் அதிகாரிகளுடன் இனைந்து மன்னார் இரணைமாதா பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 5.250 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.