பட்டிருப்பு தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருந்து கடந்த 1977, தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி காலம் சென்ற பூ.கணேசலில்கத்துக்கு அவருடைய ஊரான பெரியகல்லாற்றில் எதிர்வரும் 06ம் திகதி சிலை திறக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களும் அவரின் காலத்தில் தமிழர் விடுதலை கூட்டணியில் அவர் தேர்தல் கேட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து அவர் மூலம் சலுகைகளையும் தொழில் வாய்புகளையும் பெற்ற சிலர் இணைந்து தற்போது காலம் கடந்து அன்னார்க்கு சிலை திறக்கும் பணியில் ஈடுபட்டு அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் அவரின் மகன் கணேசலிங்கம் முகுந்தனின் உதவியால் இந்த முயற்சி ஈடேறுகிறது.
பூ.கணேசலிங்கம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருக்கும்போது பட்டிருப்பு தமிழரசு கட்சி எம்.பி யாக இருந்த சீ.மூ.இராசமாணிக்கம் மறைவுக்கு பின் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழரசு கட்சி தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தை அணுகி, பூ.கணேசலிங்கம் மண்டூர் ஓட்டு தொழில்சாலைக்கு ஒரு பங்குதாரராக அ.அமிர்தலிங்கத்தை உள்வாங்கி அவருக்கு சில சலுகை வசதி வாய்ப்பை வழங்கிவிட்டே பூ.கணேசலிங்கத்துக்கு 1977,ல் தமிழர் விடுதலை கூட்டணியில் வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் உள்வாங்கிய உண்மையை நாமறிவோம்.
இதே பாணியில்தான் தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரான சாணாக்கியா ராகுல் (சாணக்கியன் என தன்னை அறிமுகப்படுத்துபவர்) என்பவருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக நியமிக்க அவர் மூலமாக சில சலுகைகளை சிலர் பெற்றுள்ளனர். அது இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் விபரமாக அறியத்தரலாம்.
சிலை அமைப்பு ஏற்பாட்டுக்குழு தலைவர் முனைக்காடு இன்பராசா என்பவர் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக கடந்த தேர்தல்களில் எல்லாம் பிள்ளையானின் கட்சியான TMVP கட்சிக்கும், பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரான சோ.கணேசமூர்த்திக்கும் ஆதரவாக செயல்பட்ட ஒருவராவார்.
இந்த இன்பராசாவும் பழுகாமத்தை சேர்ந்த கடந்த உள்ளூராட்சி சபைதேர்தலில் பழுகாமத்தில் கேட்டு தோல்விகண்ட கந்தசாமி கல்லாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயல்பட்ட சிலர் இணைந்து சிலை திறக்கவுள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் பட்டிருப்பு தொகுதி முன்னாள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருந்த அமரர் பூ.கணேசலிங்கத்தின் நினைவு மலருக்கும் முதல் பிரதி பெறும் ஒருவராக, பட்டிருப்பு தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராகவும் கடந்த 2015, பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் பட்டிருப்பு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயல்பட்ட இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் சாணாக்கியன் என்பவர் முதல்பிரதிக்கான அதிதியாக அழைக்கப்பட்டு மறைந்த பூ.கணேசலிங்கம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் என்பதை இதன்மூலம் நிருபித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஶ்ரீநேசன், தமிழரசுகட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி தலைவர் பா.அரியநேத்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா, முன்னாள் கிழக்குமகாணசபை கல்லாறு உறுப்பினர் மா.நடராசா, கல்லாறு பிரதி தவிசாளர் திருமதி ரஞ்சினி இவர்கள் எவரையும் அதிதிகளாக சிலை திறப்புவிழாவுக்கு அழைக்கப்படவில்லை,
தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்தவர்களோ தமிழரசுகட்சியை சேர்ந்தவர்களோ எவருக்கும் இந்த சிலை திறப்பு விழாவில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.
மண்முனை தென் எருவில் பிரதேச சபை தவிசாளர் ரெலோ கட்சி உறுப்பினரான ஞா.யோகநாதனை கௌரவ அதிதியாக கடைசியாக சாட்டுக்கு போடப்பட்டுள்ளது. ஒரு தவிசாளரை அவமதிப்பு செய்துள்ளனர் அவருடைய பிரதேசத்தில் இடம்பெறும் நிகழ்வில் அவரும் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.