தமிழகத்தில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டதால், அவர் தற்போது தன் காதலனை கரம்பிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 25 வயதாகும் இவர் அரூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அதே வங்கியில், அருண்குமார் என்பவர் உயர் அதிகாரியாக இருந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபநாட்களாக, அருண்குமார், ராஜேஸ்வரியிடம் சரிவர பேசாமல், அவரை தவிர்த்து வந்துள்ளார். அது மட்டுமின்றி திருமணத்தை பற்றி பேச்சு எடுத்தாலே மறுத்துள்ளார்.
இதற்கிடையில் அருண்குமாருக்கும் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக, ராஜேஸ்வரியின் நண்பர்கள் சிலர் கூறியுள்னர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக, இது குறித்து அரூர் மகளிர் காவல்நிலையத்திலும், தர்மபுரி எஸ்.பி.அலுவலகத்திலுமு புகார் மனு அளித்துள்ளார்.
அதன் பின் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், ராஜேஸ்வரி, வீடியோ ஒன்றில் தனக்கு தாலி கட்டவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ அப்பகுதியில் வேகமாக பரவியதால், பொலிசார் உடனடியாக அருண்குமாரை அழைத்து, பேசியுள்ளனர். அப்போது அருண்குமார் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டதால், இருவருக்கும் பொலிசார் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த திருமணத்திற்கு இருவரின் உறவினர்கள் சிலரை பொலிசார் அழைத்திருந்ததால், அவர்கள் திருமணத்திற்கு வந்த இவர்களை வாழ்த்தி சென்றனர்.