இந்தியாவில் மனைவியின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் விவாகரத்து கேட்டுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 2018-ம் ஆண்டு திருமண இணையதளம் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு முன்னதாக, தன்னை ஒருவர் காதலித்ததாகவும், பின்னர் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் கணவரிடம் அவர் கூறினார்.
இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் திருமணம் ஆனபிறகு தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பார்க்குமாறு கணவரை பெண் மருத்துவர் வற்புறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த வீடியோக்களில் வருவது போன்றே நடந்து கொள்ளும்படியும் கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே, மனைவியின் செல்போனை ஒருநாள் எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த ஆபாச வீடியோவை பார்த்த என்ஜினீயர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
ஏனென்றால், அந்த வீடியோவில் இருந்தது அவரது மனைவி. இதுபற்றி மனைவியிடம் கேட்டதற்கு, ‘நான் காதலித்தவர் இவர் தான். காதலித்த நேரத்தில் தனிமையில் இருந்தபோது இந்த வீடியோவை எடுத்தோம். வருங்காலத்தில் வழக்குகளை சந்தித்தால் தேவைப்படும் என வீடியோவை வைத்திருந்தேன்’ என தெரிவித்தார். இதை நம்பிய கணவரும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் மனைவியின் தொல்லை தாங்க முடியாததால் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது, அதில் கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்துள்ளது. ஏனெனில், அதில் தனது மனைவி மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபடுவது தான் காரணம்.
இது பற்றியும் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு, திருமணத்திற்கு முன்பு தான் பலருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என பதட்டமின்றி கூறி உள்ளார்.
இதன்பிறகு கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியேறிய கணவர் தனியாக வசிக்க தொடங்கினார். ஆனால் பெண் மருத்துவரோ, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என குடும்பநல ஆலோசனை மையத்தை நாடினார்.
இதைத்தொடர்ந்து மையத்தின் மூத்த ஆலோசகர் பி.எஸ். சரஸ்வதி இருவரையும் வரவழைத்து நேருக்கு, நேர் பேச வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பி.எஸ்.சரஸ்வதி கூறுகையில், கணவரோ தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறார். பெண் மருத்துவரோ பழைய சம்பவங்களை மறந்து, திருமண வாழ்க்கையை தொடரவேண்டும் என்கிறார்.
நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம் என கூறியுள்ளார்.