ரஷ்யாவில், 10 வயது சிறுவன் ஒருவனால் கர்ப்பமானதாக, அவனது தோழியான 13 வயது சிறுமி கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ரஷ்யாவின்Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10), தான்தான் தனது காதலியான Darya (13)வின் குழந்தையின் தந்தை என்று கூறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட, பின்னர் மருத்துவர்கள் அவனை பரிசோதனை செய்து குழந்தைக்கு தந்தையாகும் அளவுக்கு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால், Ivanஐத் தவிர வேறு ஆண் நண்பர்கள் யாரும் தனக்கில்லை என்று தொலைக்காட்சியிலேயே அதிரடியாக அறிவித்திருந்தாள் Darya.
அந்த பரபரப்பையடுத்து பிரபலமாகிவிட்ட Darya, தற்போது ஒன்லைன் பிரபலமாகி இருக்கிறாள்.
அவளை சமூக ஊடகங்களில் தொடர்வோரின் எண்ணிக்கை ஏராளமாகிவிட்ட நிலையில், அவள் தற்போது ஸ்பான்சர்களைத் தேடிவருகிறாள்.
பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மொடலாக பணி புரிய விருப்பம் தெரிவித்துள்ள Darya, அதற்காக ஸ்பான்சர்களைத் தேடி வருவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தாயாகப்போகும் Darya ஏழாம் வகுப்பு படிக்க, அவளது காதலன் Ivan இன்னும் நான்காம் வகுப்பில்தான் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.