தாய்லாந்தில் இருக்கும் விமானநிலையத்தில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்த டிரக் டிரைவரின் வாகனத்தின் மோதியதால், அவர் நசுங்கி, மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nok Air நிறுவனத்திற்கு சொந்தமான 189 பேர் செல்லக் கூடிய பயணிகள் விமானம் ஒன்ற் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருக்கும் Don Mueang சர்வதேச விமானநிலையத்தில் இருந்து Nakhon Si Thammarat-வுக்கு புறப்பட தயாரானது.
அப்போது பயணிகள் பயணிப்பதற்காக அங்கு டிரக்கில் காத்திருந்த லாரி டிரைவர் காத்திருந்த போது, குறித்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை மீறி ஓடியதால், டிரக் மீது மோதியது. அதன் பின் டிரக் விமானத்தின் அடியில் சிக்கியதால், டிரக்கில் இருந்த லாரி டிரைவர்(இன்ஜினியர்) நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். அதே டிரக்கில் இருந்த இன்னொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பெயர் Thanisorn Oncha எனவும் இவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் இன்னொரு நபர் குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை.
இது குறித்து விமானநிலையத்தின் இயக்குனர் Samphan Khutharanon கூறுகையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்து நடந்தவுடன் உடனடியாக நிறுத்தப்பட்டது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் முதலில் டிரக் டிரைவர் வாகனம் செல்ல, பின்னே சென்ற விமானம் திடீரென்று அதே திசையில் சென்றதால், டிரக் விமானத்தின் கீழ் அடுக்கில் சிக்கியது.
அதில் படுகாயமடைந்த Thanisorn Oncha மட்டும் அங்கே எழ முடியாமல் கிடந்துள்ளார், மற்றொரு நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிப்பதற்காக குதிப்பது போன்று உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின் புதிய விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, உள்ளூர் நேரப்படி சம்பவ தினத்தன்று 8.40 மணிக்கு புறப்பட்டு, 5.50 மணிக்கு Nakhon Si Thammarat விமானநிலையத்திற்கு சென்றதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விமானநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர் உறுதியாக எப்படி இறந்தார் என்பதை பிரேதபரிசோதனைக்கு பின்னரேட் தெரியவரும்.
இருப்பினும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கான பண உதவிகள் போன்றவை விமான நிறுவனம் வழங்கும், அதுமட்டுமின்றி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானவை செய்து தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.