உலககை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பின்னணியில் வடகொரியா இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
சீனாவின் பிராந்திய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், இதுவரை வடகொரியாவில் எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்படவில்லை.
பிராந்திய நாடுகளை தாண்டியும் தொலைவான நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் எந்தவொரு நபருக்கும் தாக்கம் வரவில்லை. இதன் பின்னணியில் மர்மம் இருப்பதாக குறித்த ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென தென் கொரிய பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வட கொரியாவுடன் மிகவும் நெருங்கிய உறவினை சீனா கொண்டுள்ளது. வடகொரியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளில் நூற்றுக்கு 90 வீதமானவைகள் சீன நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்பது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவனர்களில் இதுவரை 600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















