பிரபல திரைப்பட நடிகையான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகை ரம்யா நம்பீசன் நேற்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் கொடுக்கப்பட்டது.
இதனால் இந்த சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையதாக கூறி, நடிகர் திலீப் என்பவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
85 நாட்களி சிறிஅயில் இருந்த தீலீல், அதன் பின் நிபந்தனை ஜாமினில் வெளியில் விடுவிக்கப்பட்டார். இதன் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகர் திலீப், இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளு படி செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த வழக்கு விசாரணைஇல் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஒருவர் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கை சினிமா துறையினர் உட்பட பலரும் அவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் அவர் குடும்பத்தினரும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துவிட்டனர்.
இந்தச் சாட்சியம் பூட்டிய அறைக்குள் ரகசியமாக நடந்தது. இதையடுத்து, நடிகரும் இயக்குனருமான லால், தனது மனைவி, தாய் மற்றும் மருமகளுடன் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தார்.
அதன் பின், நடிகை ரம்யா நம்பீசன் நேற்று தனது சகோதரருடன் சென்று வாக்குமூலம் அளித்தார். பாதிக்கப்பட்ட நடிகையும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.