தமிழ், தெலுங்கு, ஆகிய இரு மொழிகளும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா.
இவர் விஜய், அஜித் சூர்யா, தனுஷ் போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களோடு இனைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னா “படம் பார்க்க திரையரங்கிற்கு வருபவர்கள் தங்களது பிரச்சனைகளை மறந்து 2 1/2 மணி நேரம் நிம்மதியாக இருக்க வருகிறார்கள். அதனால் அவர்களை அழ வைக்கும் வகையில் நான் ஒரு படத்தை நடிக்க மாட்டேன் அந்த மாதிரியான படங்களை நான் மார்க்கவும் மாட்டேன்”.
மேலும் பேசிய இவர் “படம் என்பது கஷ்டங்களை தீர்ப்பதாக இருக்க வேண்டும்” என்றும் மனந்திறந்து பேசினார் தமன்னா.