எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி – பூஜாப்பிடிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த நாட்களாக சுதந்திர கட்சியுடன் பொதுஜன முன்னணி கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
எனினும், தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ கூட்டணி அமைக்கலாம். எவ்வாறாயினும், தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று நாமல் ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்தார்.