விஜய் தேவரகொண்டா தென்னிந்தியா முழுக்க ரசிகர்கள், ரசிகைகள் வட்டாரத்தை பெற்றுள்ளார். தெலுங்கில் தற்போது உச்ச நாயகனாக தொடர் ஹிட் கொடுத்து வருகிறார்.
அறிமுகமானது முதல் இப்போது வரை அவரின் படங்கள் லவ் ரொமான்ஸ் கதையாக தான் அமைந்து வருகின்றன. இருந்த போதிலும் ரசிகர்கள் தொடர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் தற்போது இனி லவ் கதைகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.
அவரின் நடிப்பில் அடுத்ததாக வரும் ஃபிப்ரவரி 14 ல் காதலர் தின ஸ்பெஷலாக, வேர்ல்ட் ஃபேமஸ் லவ் படம் வெளியாகவுள்ளது. ராஷி கண்ணா, கேத்ரீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சபெல்லி லெட்டி என நான்கு ஹீரோயின்கள் நடிக்க கிரந்தி மாதவ் படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று முன் தினம் இப்படத்தின் டிரைலர் வெளியானது. 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 190K லைக்குகளை கடந்து தற்போது 222K லைக்குகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.