பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துள்ளார்.
ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியா பயணமானார்.
இந்த நிலையில் புதுடில்லிக்குச் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் தற்போது அந்நாட்டின் பிதமர் மோடியை சந்தித்துள்ளார்.
பிரதமர் மகிந்தவின் இந்தியா விஜயத்தில் அடுத்து குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ளதோடு, தொடர்ந்து பல வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத்ன, பிரதமரின் இணைப்பு செயலாளர் கீர்த்தனாத் அத்துடன் கடற்படை அதிகாரியான யோசித்த ராஜபக்ச ஆகியோர் இணைந்துள்ளனர்.
பிரதமரின் குறித்த விஜயத்தில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



















