ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்த்தனவிடம் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அத்துடன் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் கேகாலை பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போது அசாத் சாலி குறுக்கு விசாரணை செய்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
சில வாரங்களுக்கு முதல் வெளியே வந்த அசாத் சாலி ஜனாதிபதி ஆணைக்குழு நியாயமான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், தனக்கும் பொலிஸ் அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டபோது, எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசாங்க உறுப்பினர்களால் அசாத் சாலியை கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
மேலும் அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தபோதும் இப்போது அசாத் சாலி குறித்து அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.



















