பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்த குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது.
இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மாணவர்கள், பகிடிவதை காரணமாக தமது பல்கலைக்கழக கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.