சீனாவை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி 916பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர் என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
எனினும் சரியான புள்ளிவிபரங்களை சீனா மறைப்பதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கிடையில், புத்தாண்டு விடுமுறை முடிந்த பின்னர் சீனர்கள் தங்கள் வழமையான வேலைகளில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், சீனத் தலைவர்களும் கவசங்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பிலும் உலகில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஆயுதச் சூழல் தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,