மீன், அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்று. அதில் வறுப்பது, குழம்பு வைப்பது என்று பலவற்றை பார்த்திருப்போம். ஆனால், அதை சுவையான புட்டாக செய்யலாம். அதன் குறிப்பு
தேவையான பொருட்கள்
- மீன் – அரைக்கிலோ
- இஞ்சி – 1 துண்டு
- பெரிய வெங்காயம் – அரைக்கிலோ
- பச்சை மிளகாய் – 5
- பூண்டு – 5 பல்
- சீரகம் – 1டீஸ்பூன்
- கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள் எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.
அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதக்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறு தீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான மீன் புட்டு தயார்.