சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு 18 நாட்கள் தொடர்ந்து மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனாவால் இதுவரை 1100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிர்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் மருத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் Xu Hui என்ற 51 வயதான பெண் மருத்துவர் Nanjing நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
அவர் கடந்த 18 நாட்களாக கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவர் Xu Hui எப்படி மற்றும் எதன் காரணமாக உயிரிழந்தார் என இன்னும் தெரியவில்லை.
அவர் மற்ற மருத்துவர்களுக்கு ரோல் மொடலாக திகழ்ந்தார் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.