சீனாவில் கொரோனா வைரஸால் தினம் இறக்கும் நோயாளிகளின் சடலங்கள் பையில் அடைக்கப்படும் வீடியோவை நபர் ஒருவர் ரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
சீனாவில் கொரோனா கொடூரத்தால் இதுவரை 1,100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 44,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும், அரசாங்கம் இதை மறைக்கிறது எனவும் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
https://twitter.com/livecrisisnews/status/1227354423464165383
சமீபத்தில் கூட கோடீஸ்வரர் ஒருவர் சீனாவில் 50,000 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாக கூறினார்.
இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாமல் ரகசியமாக அவர் எடுத்துள்ளார்.
அதில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பையில் வைத்து எப்படி மூடுகிறார்கள் என காட்டப்பட்டுள்ளது.
மேலும் தினமும் இப்படி தான் நோயாளிகள் கொரோனாவால் இறக்கிறார்கள் எனவும், இறந்தவர்களின் சடலங்கள் இவ்வாறே பையில் அடைக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.