கடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தில் கொல்லப்பட்ட தனது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டு கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது.
2020 ஜனவரி 8ம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான குழுவினர் என 176 பேரும் உயிரிழந்தனர்.
இறந்த 176 பேரில் பலர் இரட்டை குடியுரிமை பெற்ற ஈரானியர்கள், ஆனால், அவர்கள் ஈரானால் அங்கீகரிக்கப்படவில்லை. இதில் 57 கனடா குடிமக்களும் இறந்தனர்.
விமானத்தில் இருந்து கருப்பு பெட்டி மற்றும் ரிக்கார்டர் ஆய்வு செய்ய தரும் படி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட தனது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டையும் ஈரான் நிராகரித்துவிட்டது.
உக்ரேனிய விமான விமானத்தை தவறாக சுட்டுக் கொன்றதாக ஈரான் ஒப்புக் கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் ‘சட்டபூர்வமான அடிப்படை இல்லை’ என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறினார்.
ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை’ என்றும் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.