ஐக்கிய அரபு அமீரகத்தில் மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
கேரளாவை சேர்ந்தவர் Anil Ninan. 32 வயதான இவருக்கு Neenu என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளார். இந்த தம்பதி ஐக்கியர் அரபு அமீரகத்தின் Umm Al Quwain-வில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை, திடீரென்று வீட்டின் மின்சார பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தீவிபத்தில் Neenu சிக்கிக் கொண்டதாகவும், அப்போது வீட்டின் படுக்கையறையில் இருந்த Anil Ninan இதை அறிந்து உடனடியாக அவரை காப்பாற்ற போராடியுள்ளார்.
அதன் பின் இந்த தம்பதி இருவரும் அபுதாபியில் இருக்கும் Mafraq மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதில் நீனுவுக்கு 10 சதவீத தீக்காயம் தான் எனவும், அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் கூறிய மருத்துவர்கள், அதே சமயம் Anil Ninan-க்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காப்பாற்றுவது கடினம் என்றும் கூறியுள்ளனர்.
Anil Ninan உயிர் பிழைக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்து வருவதாக மருத்துவமனையில் இருக்கும் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், நீனு தாழ்வரத்தில் இருந்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து அனில் நினான் காப்பாற்ற ஓடி வந்த போது அவர் தீ விபத்தில் சிக்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.