தமிழ் இனவாதிகளை மகிழ்வித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அப்பாவி தமிழ் மக்களை அந்த இனவாதிகளிடம் இருந்து விடுவிப்பதே நல்லிணக்கத்தை முதல் நடவடிக்கை எனவும் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசியலில் ஈடுபட்ட இனவாதிகள் மக்களுக்காக மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை. மத்திய அரசாங்கம் வடக்கு மக்களை கவனிப்பதில்லை என காட்டவே அவர்கள் முயற்சித்தனர். இதனால், அரசாங்கம் புத்திசாலித்தனமாக சிந்திதது வடக்கில் வறிய மக்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் குடியுரிமை சட்டம் கொண்டு வந்த போது, எமது நாட்டின் தமிழர்கள் இந்திய குடியுரிமையை கேட்டனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு தொந்தரவுகள் இல்லை என இந்தியா கூறியது. அப்படி கூறி குடியுரிமையை வழங்கவில்லை.
அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச இம்முறை இந்தியாவுக்கு சென்றிருந்த போது, இந்திய பிரதமர் மோடி 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி கேட்டார். இந்த திருத்தச் சட்டம் பெரிய தேவை கருதி கொண்டு வரப்பட்டதல்ல. மோடி இது பற்றி கேட்ட போது எமது பிரதமர் அமைதியாக இருந்தார். அதனை பாராட்ட வேண்டும். 13 வது திருத்தச் சட்டம் தொடர்பான பிரச்சினையை பலவந்தப்படுத்தி தீர்க்க முடியாது.
அதேபோல் நாம் மோடியை படிக்க வேண்டும். எமது நாடு பிளவுப்படுவதை அவர் விரும்பவில்லை. அவருக்கு தேவை தமிழ் நாட்டின் வாக்குகள். அதற்காகவே அவர் 13 வது திருத்தச் சட்டத்தை நினைவுப்படுத்துகிறார். அத்துடன் இம்முறை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்பட்டதன் மூலம் இனவாத தலைவர்களால் தற்போதைய அரசாங்கத்தை ஆட்டுவிக்க முடியாது என்பதை வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் புரிந்துக்கொண்டனர். இது அந்த இனவாதிகளுக்கு கிடைத்த பெரிய தோல்வி எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.