கொரோனா பாதிப்புக்கு உள்ளான வடகொரிய அதிகாரி ஒருவர் கண்காணிப்பில் இருந்து வெளியேறியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடகொரியாவின் வர்த்தக அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து நாட்டிற்கு திரும்பிய பின்னர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த அரசாங்க ஊழியர் பொது குளியல் பகுதிக்கு சென்ற நிலையில், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினரான அதிகாரி ஒருவர் சீனாவுக்கு சென்று வந்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்து பண்ணை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வட கொரிய அரசாங்கம் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளன, இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் அந்த நாடு இதுவரை எவரையும் சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், கொரோனா நோய் அறிகுறிகளுடன் சிலரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக வடகொரியாவில் இயங்கும் சில மருத்துவமனைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
மட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தங்களின் எல்லையை முதன் முதலில் வடகொரியாவே மூடியது.
சீனாவுடன் எல்லையை பங்கிடும் நாடுகளில் ஒன்றான வியட்நாம், அதன் நகரம் ஒன்றை மொத்தமாக முடக்கி, சுமார் 10,000 பேரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.