ரஷ்யாவில் 13 வயது மாணவியை 10 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்போது நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Zheleznogorsk-ஐ சேர்ந்தவன் Ivan. 10 வயது சிறுவன் ஆன, இவன் 13 வயது சிறுமியான Darya தன்னுடைய காதலி எனவும், அவர் கர்ப்பமானதற்கு நான் தான் காரணம் என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தான்.
இது குறித்து அவர்கள் நேரடியாகவே தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி கொடுத்ததால், இவர்கள் தான் உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறினர். அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் இவர்களின் புகைப்படம் வைரலானது.
ஆனால் மருத்துவர்களோ Ivan நிச்சயமாக தந்தையாக இருக்க முடியாது. அவன் இன்னும் சிறுவன் தான் என்று அடித்து கூறினர்.
இதையடுத்து தற்போது குறித்த சிறுமி என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை Ivan கிடையாது. நான் இளைஞன் ஒருவரால் கட்டாபயப்படுத்தி, பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டேன் என்று உண்மையை உடைத்துள்ளார்.
குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது 15 வயது சிறுவன் எனவும், அவன் Siberia மாகாணத்தில் இருக்கும் Krasnoyarsk-வை சேர்ந்தவன் என்றும், தற்போது சிறுவன் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சிறுவனின் பெற்றோர், தங்கள் மகன் இதற்கு நிச்சயமாக காரணமாக இருக்கமாட்டான் என்று அப்போதே உறுதியாக கூறினர். மருத்துவர்கள் கூறுவதை நாங்கள் நம்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.