வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியுதீனை தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பௌத்த சங்க சபையினரின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது என பதியூதீன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.