உலகம் முழுவதிலும் இன்று மகா சிவராத்திரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுக்க சிவ ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சிவன் கோவில்களில் இன்று நடக்கும் 6 கால பூஜைகளும் சிறப்பு பூஜையாக நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் முக்கிய தலங்களான தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், மதுரை மீனாட்சி கோவில் என காலை முதலே பக்தர்களின் கூட்டம் கூடியது.
ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரித்து இரவில் கண்விழித்து சிவ பூஜை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புனித தலமான இந்தியாவின் காசி விஸ்வநாதர் ஆலயம், உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் ஆலயம், டில்லி கௌரி சங்கர் ஆலயம், மகாராஷ்ட்ரா பாபுல் நாத் ஆலயம் ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினர்.
கர்நாடகாவில் பலபுரகி பகுதியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 25 அடி உயரத்தில் 300 கிலோ பயறு வகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.
சிவராத்திரி ரகசியங்கள், சிவ லிங்கத்தின் மர்மங்கள் வீடியோ இதோ..