உலகம் முழுக்க அனைத்து பக்த கோடி மக்களால் மகா சிவராத்திரி வழிபாடு ஃபிப்ரவரி 21 வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவ ஆலயங்களிலும் 4 கால விசேஷ பூஜைகள் சிறப்பு அபிஷேக் ஆராதனைகள் நடைபெறும்.
இந்த மகா சிவராத்திரி விரதம் சிவனுடனே எப்போதும் இருந்து பிரியா சக்தியாக அருள்புரியும் அம்பிகை மனித குலத்தின் நன்மைக்கும் ஆயுளுக்கும் சிவனை பூஜித்து வரம் பெற்ற நாளே இந்த சிவராத்திரி.
பொதுவாக மனித உடலின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் தூக்கம் இன்றியமையாததாகிறது. அதே போல ராத்திரி என்பது எந்த ஒரு வேளையும் இல்லாமல் இருள் சூழ்ந்த உறங்கும் காலமே.
உபநிடதங்கள் தூக்கத்தை ஸ்வம் அபீதோபவதி என கூறுகின்றன. அதாவது தன்னை அடைகிறான் என்பது பொருள். அதே போல வேதங்களும் இதை தூங்குகிறான் என்கின்றன. நம் நன்மைக்காகவே சர்வேஸ்வரனாக சிவன் அளித்த வரமே தூக்கம்.
பகலெல்லாம் உழைத்து களைத்து போகும் நம் உடலும் இந்திரியங்களும் சக்தியை இழந்து ஓய்வெடுக்கின்றன. அந்த வேளையில் நமது இதயத்தில் உள்ள சிவன் நம் ஜீவனை அணைத்து அருகில் வைத்துக்கொள்வார். இப்படியாக தூங்கி எழுந்த பின் சுகமாகவும், புத்துணர்வாகவும் இருப்பதாக உணர்கிறோம் அல்லவா.
அச்சமயே நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு மீண்டும் அளிக்கிறார். நம்மை போலவே இயங்கும் இந்த உலகம் இழந்து போன சக்தியை சிவன் அதற்கு அளித்து மீண்டும் உயிரூட்டுவதே இந்த சிவராத்திரி.
அதனால் உலகமே சிவனுள் ஒடுங்கும் இந்த ஒரு நாள் மகா சிவராத்திரி. தூங்காமல் விரதம் இருந்து சிவனுள் லயித்து மீண்டும் புத்தொளி பெற்று வாழ்வில் சிறப்படைவதே இந்த சிவராத்திரி.
இந்த நாளை தவற விட்டால் மீண்டும் அடுத்த ஆண்டு சிவராத்திரி வரை காத்திருக்க வேண்டும். மேலும் பல ரகசியங்கள் இந்த வீடியோவில்….