பப்பு நியூ கினியா தீவின் பிரதமர் ஜேம்ஸ் மரபே நியூசிலாந்துக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள நிலையில், அகதிகளை மீள்குடியமர்த்தும் விவகாரம் குறித்து விவாதிக்குமாறு கத்தோலிக்க தேவாலயம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் அதிகமான அகதிகள் பப்பு நியூ கினியாவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தீர்வுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவது தொடர்பாக பேசக்கோரி கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் பொதுச்செயலாளர் பாதிரியார் கியோர்கியோ லிசினி தெரிவித்துள்ளார்.
பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்த தயார் என பல ஆண்டுகளாக அந்நாட்டு அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், இச்சலுகையை அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்த சூழலில் பப்பு நியூ கினியா பிரதமர் இவ்விவாகரத்தை நியூசிலாந்துடன் விவாததிப்பதன் மூலம், சிறைப்பட்டு இருப்பவர்களுக்கு உளவியல் ரீதியான ஆறுதலை ஏற்படுத்தும் என பாதிரியார் லிசினி தெரிவித்திருக்கிறார்.