நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட், தான் கூறியதை போலவே முதல் டெஸ்ட் போட்டியில் விராட்கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி துவங்குவதற்கு முன் பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர், “விராட்டுக்கு மீண்டும் பந்து வீச நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான விளையாட்டு வீரர். எவ்வளவு பெரிய வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர்களை போன்ற வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி என்னை சோதனை செய்து பார்ப்பதற்காகவே நான் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாடுகிறேன்.” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் அவர் கூறியதை போலவே, இந்திய அணியின் கேப்டனான விராட்கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.