மாவட்டத்திற்கு ஒரு வெற்றிவாய்ப்புள்ள பெண் வேட்பாளரை தேர்தலில் களம் இறக்குவதென நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற இக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்படுள்ளது என்பதனை நாடாளமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் கூட்ட முடிவில் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளை, இன்று மாலை 5மணிக்கு தமிழரசுக்கட்சியின் நாடாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. .
இதன்போது மாவட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் மாவட்டத்துக்கு ஒரு பெண் வேட்பாளர் என்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் யாழ்மாவட்டத்தில் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட திரு .ரவிராஜ் அவர்களின் துணைவியார் சசிகலா ரவிராஜ் அவர்களையும் வன்னி மாவட்டத்தில் தற்போதைய நியமன உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களையும் களம் இறக்குவதாக முடிவு செய்யப்பட்டதாக அறிய முடுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் ஊடாக இளம் புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்றைய நிலையில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் திரு சுமந்திரன் தெரிவித்தார்.