எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கட்சிக்கு அறிவித்துள்ள நிலையில்,ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி முன்னணியின் கீழ் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் சில உறுப்பினர்கள் மாறுப்பட்ட தேர்தல் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை கட்சித்தரப்புகள் மறுத்துள்ளன.
இதேவேளை முன்னணிக்கான சின்னம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.