கடந்த காலத்தில் நாட்டில் நடந்த அனைத்து குற்றங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் எந்த விதத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் பொலன்நறுவை மக்கள் கட்டாயம் அவரை தோற்கடிக்கப்பார்கள் எனவும் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு மீண்டும் எவருடைய ஆலோசனைகளும் அவசியமில்லை. தோல்வியான தலைவர்களின் அலோசனைகளை நாம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தார்மீக உரிமையில்லை. அவர் எதில் போட்டியிட்டாலும் பொலன்நறுவை மக்கள் அவரை தோற்கடிப்பார்கள்.
கடந்த காலத்தில் நாடு சீர்குலைந்தமைக்கு சிறிசேனவே காரணம். நாட்டில் நடந்த அனைத்து குற்றங்களுக்கும் அவர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.