ஈரான் சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ள நிலையில், அவர் அதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாஸ்க் போடாமல் இருந்ததால், அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 25 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக ஈரானில் இந்த வைரஸ் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். 95 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் சுகாதார துறை இணை அமைச்சர் Iraj Harirchi-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதை அவரே வீடியோ ஒன்றில் வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய நிலை அந்தளவிற்கு மோசமாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.
Deputy Health Minister of #Iran Harirchi who has been briefing officials & journalists in the past couple of days has been confirmed to be infected with #CoronaVirus. He said in a video message that “we will defeat Corona”.#COVID19 pic.twitter.com/sgtMiDMbcC
— Abas Aslani (@AbasAslani) February 25, 2020
இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யபடுவதற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் Iraj Harirchi கலந்து கொண்டார். அப்போது அவர் மாஸ்க் இல்லாம், சில முறை இருமினார், அதுமட்டுமின்றி அவருக்கு அதிகப்படியாக வியர்வை வந்தது.
இதனால் அவருக்கு அப்போதே கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான வீடியோவும் வெளியாகியுள்ளது.
https://twitter.com/Tasnimnews_Fa/status/1232281225253019649
அதோடு, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதும் கூட, அவர் இருமியுள்ளார். இந்த இரு பேட்டியின் போதும் அவர் மாஸ்க் இல்லாமல் இருமினார். இதனால் அது மற்றவர்களுக்கு பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.