8 வது நாடாளுமன்றம் திங்கள்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கலைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு வெளியடப்பட்ட பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசின் தலைவராக செயற்படுவார்.
இந்த அரசாங்கத்தின் கீழ், அமைச்சரவை அமைச்சர்களுக்கே அதிகாரங்கள் இருக்கும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் இல்லாது போகும்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மார்ச் 2 இல் ஜனாதிபதி அறிவிப்பார் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை, தேர்தலில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல்களில் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதையும் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவின் கடைசி நாள் வரை தங்கள் பணத்தை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரிய தெரிவித்தார்.
மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 14 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேசபிரிய தெரிவித்தார்..
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 50 நாட்களுக்குள் நடைபெற்றது என்று அவர் கூறினார்.