கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரினதும் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.